மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமையாசிரியராக சம்ரூத் பேகம் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊராட்சி அலுவலகத்திற்கு தன்னுடைய மனுக்களை கொடுத்து அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி செல்லும் மாணவர்கள் நத்தம்- மேலூர் ஆபத்தான சாலையக் கடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
மேலும், பள்ளியில் படிக்கும் ,மாணவிகளை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய சொல்வதும், கழிப்பறை சுத்தம் செய்ய முடியாது என்று சொல்லி மலம் கழிக்க கூடிய மாணவர்களை வீட்டிற்கும் தலைமையாசிசரியர் சம்ரூத் பேகம் அனுப்பி வைப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே,மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையும், மதுரை மாவட்ட ஆட்சியரும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.