• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மண் உயிர் காப்போம்

ByKalamegam Viswanathan

Mar 7, 2025

திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் பவுண்டேஷன் சார்பாக வேளாண்மை பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, வேளாண்மை இணை இயக்குனர்
சுப்புராஜ் தலைமை தாங்கி,விவசாயிகளுக்கு வேளாண் மை
உபகரண பொருட்கள் வழங்கினார். மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் தமிழ் செல்வன், முத்துக்குமரன்,நிதி பங்களிப்பு சமூக பொறுப்பு அலுவலர் சுஜீன் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பழனியம்மாள் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி விவசாய விவரங்கள் பதிவேற்றம், பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை, மண் உயிர் காத்து மண் உயிர் காப்போம் திட்டம்,மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருள்கள் பற்றியும்,வேளாண்மை அலுவலர் தீப ஞானசுந்தரி இடுபொருள்கள், உயிர் உரங்கள், இருப்பு பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினர்.57 விவசாயிகளுக்கு வேளாண்மை பண்ணை கருவிகள் கடப்பாரை, மண்வெட்டி, கதிர் அறுவாள், கொத்துவாள், இருப்பு தட்டு ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ,உதவி வேளாண்மை அலுவலர்கள் சரவணகுமார் பாண்டியராஜன் சந்திரசேகரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.