• Thu. Apr 18th, 2024

மக்களுக்காக தனது திருமணத்தை நிறுத்திய பிரதமர்!

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாகத் தனது திருமணத்தை நியூசிலாந்து பிரதமர் ரத்து செய்துள்ளார்.

ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதால் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , தனது நாட்டு மக்களின் நலன் கருதி தனக்கு நடக்கத் இருந்த திருமணத்தை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ரத்து செய்துள்ளார். இதனை அந்நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர்..

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். இவருக்கு கிளார்க் கைபோர்டு என்பவருடன் 2019 ஆம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் பிப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தனது திருமணத்தை ஜெசிந்தா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார் .

தனக்கும் பொதுமக்களுக்கும் வித்தியாசம் கிடையாது. எல்லோருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் ஒன்றுதான். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்புவோம். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்போம் என தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *