• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

விடுதியில் அதிகாலை 4 மணிவரை நடனமாடி மாட்டிக்கொண்ட பின்லாந்து பிரதமர்

Byமதி

Dec 13, 2021

பின்லாந்து பிரதமர் சன்னா மரின். 34 வயதான இவர் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் பிரதமராகி உள்ளார். உலகின் மிக இளமையான பிரதமரும் இவரே.

இவரின் அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றாமல்  ஹெல்சின்கியில் உள்ள இரவு விடுதியில் அதிகாலை 4 மணிவரை நடனமாடி பொழுதை கழித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிளப்பில்  விடிய விடிய நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.