கணவர் இறந்து விட்டதால், குழந்தையை பறித்துக் கொண்டு, மருமகளை துன்புறுத்தி மாமனார், மாமியார் விரட்டியடித்தனர். குழந்தையை மீட்டு தரக்கோரி, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை ரங்கநாதபுரம் மேலத்தெருவை சேர்ந்த கார்த்திக் மனைவி விமலா தேவி (29). உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் இறந்து விட்டார்.
இதனால் கைக்குழந்தை சஜித் கார்த்திக் (3) உடன் மாமியார், மாமனார், நாத்தனார் கௌசல்யா, ரங்கராஜன் உள்ளிட்ட நான்கு பேருடன் விமலாதேவி வசித்து வந்தார்.
இந்த நிலையில் கோம்பை பகுதியில் உள்ள ஏராளமான அப்பாவி பொதுமக்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களுடைய பத்திரங்களை அபகரித்துக் கொண்டதாக கோம்பை காவல்துறையினர் மாமனார் சுருளி, மாமியார் பால் தாய், நாத்தனார் கெளசல்யா, கணவர் ரெங்கராஜன், என்னையும் சேர்த்து ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாற்றியவர்களின் பத்திரங்களை திரும்ப ஒப்படைக்குமாறு எனது குடும்பத்தாரிடம் தெரிவித்தேன்.
இதனால் ஆத்திரமடைந்த எனது குடும்பத்தினர் என்னுடைய குழந்தையை பறித்துக் கொண்டு, நகைகள், கல்வி சான்றிதழ்கள், ஆதார் , குடும்ப அட்டை, பறித்துக் கொண்டு அடித்து துன்புறுத்தி என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.
எனவே தன்னுடைய குழந்தையை மீட்டுத் தருமாறு இன்று தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் இடம் புகார் தெரிவித்தார்.