

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன். அவரது படங்களுக்கு, நடனத்திற்குஎன தனி ரசிகர்கள் கூட்டம் தெலுங்கில் மிக அதிகமாக இருக்கிறது.
அது போல அவருக்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். இந்தியில் அல்லு அர்ஜுன் படங்களை யு டியூப் தளங்களில் பார்த்தவர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும்.இருந்தாலும் தமிழிலும், இந்தியிலும் அவரது தெலுங்குப் படங்கள் டப்பிங் ஆகி வெற்றி பெற்றதுமில்லை, வசூலைக் குவித்ததும் இல்லை.
சென்னையில் பிறந்து வளர்ந்து, படித்த அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த போது பிறந்து வளர்ந்தஊரில் வெற்றி பெற வேண்டும், அதுதான் முக்கியமான வெற்றி என்று பேசினார். அவர் நினைத்தது போலவே ‘புஷ்பா’ படம் தமிழில் பெரிய வெற்றியைப் பெற்று நேரடி தமிழ்ப் படங்கள் அளவிற்கு வசூலைக் குவித்திருக்கிறது கடந்த வருடம் வெளிவந்த படங்களில் படத்தை வாங்கியவர்களுக்கு லாபத்தைக் கொடுத்தது என தியேட்டர்காரர்களுக்கு மகிழ்ச்சி. 25 கோடிக்கும் அதிகமான வசூல் தமிழ்நாட்டிலும், இந்தியில் இப்படம் 75 கோடி வசூலை கடந்திருக்கிறதுதமிழ், இந்தியில் இந்தப் படத்திற்காக அதிக அளவில் விளம்பரங்கள் செய்யவில்லை, புரமோஷன் செய்யவில்லை.
ஆனால், வேறு எந்தப் படமும் போட்டிக்கு இல்லாததால் இந்தப் படம் பெரிய வெற்றி பெற காரணமாக அமைந்துவிட்டது. மேலும், படத்தின் பாடல்களும் சமந்தாவின் நடனமும ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்துவிட்டது என்றே கூறலாம்
