• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகருக்கு மக்கள் அமோக வரவேற்பு.

ByM.I.MOHAMMED FAROOK

Mar 2, 2026

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணாபூர் கிராமத்தில் கண்ணாபூர் சாலை, மேலத்தெரு, கீழத்தெரு, கண்ணாபூர் பேட் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலமாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக கண்ணாப்பூர் கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை வரவேற்கும் வகையில் ஆரத்தி எடுத்தும் சிறுவர்கள் சதீஷ், பிரகதீஷ் ஆகியோர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் ஆடி உற்சாகமான வீர வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் சிலம்பாட்ட வீரர்களை கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிக்க சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரனை ஒவ்வொருவரும் இன்முகத்துடன் வரவேற்றனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெண்கள், பெரியோர்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.