• Mon. Dec 9th, 2024

17 இந்தியர்களைக் கொண்டு உருவாகிறது கனடா பாராளுமன்றம்

Byகுமார்

Sep 23, 2021

கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. அக்கட்சி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்புப் பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த இந்திய வம்சாவளியினரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த், பர்திஷ் சாகர் ஆகியோர் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். நியூ டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த ஜக்மீத் சிங், பர்னபி தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவில் இந்தியர்களுக்கு எப்போது தனியிடம் உண்டு என்பதை இத்தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது.