• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

காளையின் உரிமையாளர் ஆட்சியரிடம் புகார்..,

Byமுகமதி

Mar 2, 2026

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவரது ஜல்லிக்கட்டு காளையை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி என்ற கிராமத்தில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கொண்டு போய் வாடிவாசலில் காளையை இறக்கி இருக்கிறார்கள்.

அந்த காளை களத்தில் இறங்கி விளையாடிய போது யாரும் பிடிக்க முடியவில்லை. எல்லோரையும் மிரட்டி இருக்கிறது. நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடி இருக்கிறது. சிறந்த காளை என்றும் அறிவித்திருக்கிறார்கள். சிறந்த காளைக்கு வழங்க வேண்டிய பரிசு வழங்கப்படும் என்று கூறி மாலை நேரம் வரையிலும் காத்திருக்க செய்து விட்டு பரிசு கொடுக்கவில்லை.

இது குறித்து காளையின் உரிமையாளர்களில் ஒருவரான மணிகண்டன் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் கொடுத்து இருக்கிறார். அரசு விதிமுறைகளின் படி எங்களது காளைக்கு உரிய பரிசை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் நீதிமன்றமும் செல்ல தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் வெளியூரிலிருந்து சென்றதால் எங்களது காளைக்கு பரிசு கிடைக்கவில்லை. உள்ளூர் மாடுகளுக்கு தான் பரிசுகள் வழங்க வேண்டும் என்று கருதி இதுபோல் செய்திருக்கிறார்கள்.

மற்ற ஊர்களில் எல்லாம் இது போல் கிடையாது. கல்லக்குடியில் மட்டும் இதுபோல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி குறைந்து அழிவை நோக்கிச் செல்லும் என்றார்.