மதுரையில் ஒபிஎஸ் அளித்த பேட்டி ஒன்றில், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என கூறினார். இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் அதிமுகவினரிடம் உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவு செய்தால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கலாம்; ஆனால் சசிகலாவை எதிர்த்தே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் எனபது நினைவில் இருக்கட்டும் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி சசிகலாவுடன் அதிமுகவினர் எந்தவித தொடர்பும் வைக்க கூடாது என கூறியவர் ஓபிஎஸ் தான் என சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்துக்கு ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.