• Wed. Dec 11th, 2024

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதல்…

Byமதி

Oct 25, 2021

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 அணிகளானஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.

நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றுக்கு தகுதி பெற்ற முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது.

முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த கைல் கோட்ஸர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து ‘சூப்பர்-12’ சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 தடவையும் ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி கண்டுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் எழுந்த குழப்பம் காரணமாக போதிய தயார்படுத்துதல் இல்லாமல் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, அதிர்ச்சி அளிக்க ஸ்காட்லாந்து தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.