• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் படம் பெயர் அழிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

ByA.Tamilselvan

Jun 24, 2022

அதிமுக அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் ,பெயர் அழிக்கப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்.,இபிஎஸ் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது.
எனவே பொதுக்குழு கூட்டம் ஜூலை11க்கு ஒத்திவைக்கப்பட்டது.அதிமுகவில் ஒற்றைதலைமை பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில் கட்சியை இபிஎஸ் சட்ட விரோதமாக கைப்பற்ற முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த ஓபிஎஸ் ப டம் மற்றும் பெயர் அழிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஓபிஎஸ் ஈடுபடாத நிலையில் அவரது பெயர் புகைப்படத்தை அழிப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.