• Sat. Apr 20th, 2024

கொலை செய்த குற்றவாளியை கேரளாவில் தட்டி தூக்கிய நீலகிரி போலீஸ்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆறோட்டுபாறை பகுதியில் மூன்று பெண்களை கொலை செய்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கேரளாவில் தட்டி தூக்கிய நீலகிரி போலீஸ்நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆறோட்டுபாறை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரே வீட்டில் மூன்று பெண்களை கொலை செய்த குற்றவாளி லெனின் (35) ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறையினர் தேடி வந்தனர்.


இந்நிலையில் மாவட்ட எஸ்பி பிரபாகரன் உத்தரவின் பேரில் கூடலூர் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் கூடலூர் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் தலைமையில் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் மற்றும் முதல் நிலைக் காவலர் சிகாபுதீன் காவலர்கள் யுவராஜ் முத்து முருகன் அசோக் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பல இடங்களில் குற்றவாளி லெனினை தேடி வந்தனர்,நிலையில் கேரளா கர்நாடகா மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படையினர் பிற மாநில காவல்துறையுடன் தொடர்பு கொண்டு புலன் விசாரணை செய்ததின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி லெனின் கேரளாவில் கைது செய்யப்பட்டான். கூடலூர் அழைத்து வந்த காவல் துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர் மேலும் கொலை குற்றவாளியை கண்டுபிடிப்பதில் பெரும் பங்கு வகித்த தனிப்படையினர் மற்றும் எஸ் பி எஸ் ஐ பிரதீப் குமார் சைபர் கிரைம் காவலர் செந்தில் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *