• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ராஜமௌலி இயக்கவிருக்கும் அடுத்த சூப்பர்ஸ்டார்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் RRR.

இந்த படம் 5 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது RRR பிரமாண்ட திரைப்படம் முடிந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீசுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராஜமௌலி அடுத்தகட்டமாக தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இப்படத்தின் படத்தின் பற்றிய முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, மகேஷ் பாபுவை வைத்து இயக்க போகும் காட்டு Adventure படமாக எடுக்க போவதாக கூறப்படுகிறது. ஒரு வேலை இப்படம் டார்சனை போன்று இருக்குமோ என்று வதந்திகளும் வந்துள்ளன!

அந்த வகையில், மகேஷ் பாபு ஆக்சன் மற்றும் ரொமான்டிக் காட்சிகளுக்கு தான் செட் ஆவார். இவரை வைத்து டார்சன் போன்று காட்சிகள் எடுப்பதற்கு வாய்ப்பை இல்லை என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.