


தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது இதனை ஒட்டி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறப்பதற்கு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கூட்டுத் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பைன் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் திமுக சார்பாக 21வது வார்டுக்கு உட்பட்ட பேருந்து நிலையம முன்பாக சிவகங்கை நகரச் செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் அயூப் கான்,வீனஸ் ராமநாதன்,ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்படும் வகையில் நீர் மோர் பந்தலை நகர்மன்ற தலைவர் துரை. ஆனந்த் திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களுக்கு தர்பூசணி பழம் ,நீர், மோர் ஆகியன வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன்,மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் தமிழ் பிரியா,நகர் மன்ற உறுப்பினர் பாக்கியலட்சுமி விஜயகுமார்,தகவல் தொழில் நுட்ப அணி நகர அமைப்பாளர் சதீஷ், மற்றும் கழக நிர்வாகிகளும்,ஏராளமான திமுகவினர் பொதுமக்கள் என்ன ஏராளமானூர்கலந்து கொண்டனர்.


