


கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது மக்கள் பெருமளவு வெப்பத்தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தாவுப் படி திமுக சார்பில் மக்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து மக்களுக்கு உதவிடமுதல்வர் உத்தரவு இட்டுள்ளார்.

அதன் படி கூட்டுறவுதுறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன்அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பாக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் ஏற்பாட்டில் அவரது தலைமையில் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகர்மன்ற தலைவர் துரை.ஆனந்த்,அரசு வழக்கறிஞர் ஆதி. அழகர்சாமி ஆகியோர் முன்னிலையில் மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.


மேலும் குளிர்ச்சியூட்டும் தர்பூசணி பழங்கள்,தாகத்தை தணிக்க கூடிய தண்ணீர், சர்பத் ,மோர் உள்ளிட்ட பானங்கள்பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பாஸ்கர்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மார்க்க ரெட் கமலா, அரசுவழக்கறிஞர்கள் சிவக்குமார், பிரபாகரன், தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மனோ,ஆதிதிராவிடர் நலத்துறை அணி துணை அமைப்பாளர் சிங்கமுத்து, மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

