மானை விழுங்கிய மலைப் பாம்பு – மான் உயிரிழந்த நிலையில், மலைப் பாம்பு உயிருடன் மீட்பு !!!
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள கூடலூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தோட்டத்தில் மலை பாம்பு ஒன்று வயிறு பெருத்த நிலையில் நெளிந்தபடி கிடந்து உள்ளது. இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், சுரேஷ்குமார் தலைமையில், வெற்றிவேல், வேல்முருகன், மோகன், முகமது அலி மற்றும் ஜுபேர் நாராயணன் ஆகிய 7 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உயிருடன் இருந்த அந்த மலைப் பாம்பை மீட்டு அது விழுங்கி இருந்த மானை லாவகமாக வெளியேற்றினர். பின்னர் உயிருடன் இருந்த அந்த மலைப் பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர். மானை விழுங்கிய மலைப் பாம்பு கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
