• Thu. Apr 18th, 2024

எம்.ஜிஆர் மாடல் ஜெயலலிதா மாடல் கலந்தது தான் தமிழ்நாடு மாடல் – ஈபிஎஸ்

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இது வேளாண் பட்ஜெட் அல்ல; வேளாண் மானியக் கோரிக்கையின்போது தரக்கூடிய கொள்கை விளக்கக் குறிப்புதான், விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட். வேளாண் பட்ஜெட்டுக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை; அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சி. திராவிட மாடல் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எம்ஜிஆர் இருந்தபோது அது எம்ஜிஆர் மாடல், ஜெயலலிதா இருந்தபோது அது ஜெயலலிதா மாடல். இரண்டையும் சேர்த்து தமிழ்நாடு மாடலாக நாங்கள் உருவாக்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *