• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம்..,

ByS. SRIDHAR

Oct 28, 2025

குமரமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி. பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குமரமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் சுக்ல சஷ்டி(கந்த சஷ்டி)விழா சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. சூரனை வதம் செய்த இடம் திருச்செந்தூர் என்றாலும் உலகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் திருக்கோயில்களில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார உற்சவம் சிறப்பாக நடைபெறும் அந்த வகையில், புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த குமரமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் 29-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 22 ஆம் தேதி (22.10.2025) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர். கந்தசஷ்டி விழா தொடங்கியது முதல் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமிக்கு ஒவ்வொரு நாளும் ஹோமங்கள்,அபிஷேக ஆராதனைகள்,சண்முகார்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள், சொற்போழிவுகள்,வாகன வீதி உலா நடைபெற்று வந்தது.இந்த நிலையில், கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம்,சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.பின்னர் அன்னையிடம் இருந்து பெற்ற சக்தி வேலுடன், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காக போர்க்கோலத்தில் புறப்பட்டார். மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் ‘வெற்றி வேல், வீரவேல்’ என முழக்கம் எழுப்பினர். அதன் பின்னர் போர் தொடங்கியது.

முருகப்பெருமானை எதிர்கொள்வதற்காக அசுர படையும் தயாரானது. முதலில் மாயையே உருவான யானை முகம் கொண்ட தாரகாசுரன், அதன் பின்னர் சிங்கமுகாசுரன் ஆகியோரை வேல் கொண்டு வீழ்த்தினார் முருகப்பெருமான். அதன் பின்னர் ஆணவத்தால் அடிபணிய மறுத்த சூரனை வதம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான். அவனை தனது வாகனமான மயிலாகவும், சேவற்கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.இதை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சூரனின் சப்பரத்தில் வெட்டுண்ட தலைக்கு பதில் சேவல் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த சேவல், முருகப்பெருமானின் கொடியில் கட்டப்பட்டது. இத்துடன் சூரசம்ஹார நிகழ்வு நிறைவு பெற்றது. சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், “கந்தனுக்கு அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா” என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.

சீக்ல சஷ்டி(கந்த சஷ்டி) விழாவின் அடுத்த நிகழ்வாக முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தை காண்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலிருந்தும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.