



234 தொகுதிகளில் உள்ள பிரதான பிரச்சனைகளை கண்டறிய, த.வெ.க தொண்டர்களுக்கு தலைவர் போட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந் நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்கும் மாவட்ட கழக செயலாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் கட்சியின் தலைவர் விஜய் தங்களது தொகுதியில் உள்ள பிரதான ஐந்து பிரச்சனைகள், மக்களின் கோரிக்கைகள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் இருக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து கொண்டு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வரும் காலத்தில் மக்களின் பிரதான பிரச்சனைகளை தொகுதி வாரியாக போராட்டங்கள் நடத்த பொதுக்குழுவில் விவாதிக்க உள்ளதாக கூறுகின்றனர்.

