தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அவல ஆட்சியை எண்ணிப் பார்த்து,எடை போட்டு உள்ளாட்சி தேர்தலில் வாக்களியுங்கள் என்று ஓபிஎஸ் கூறியதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.1374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள்,சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரைக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிவடையும் நிலையில்,தேர்தல் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,நெல்லையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் :”உள்ளாட்சி தேர்தல் என்பது தொண்டர்கள் பங்கேற்கும் தேர்தல்,இந்த தேர்தல் மூலம் தொண்டர்கள் கட்சியில் படிப்படியாக வளர முடியும்.மேலும்,50 ஆண்டு காலத்தில் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுக இருக்க தொண்டர்களே காரணம்”,என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய அவர்:”தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அவல ஆட்சியை எண்ணிப் பார்த்து,எடை போட்டு உள்ளாட்சி தேர்தலில் வாக்களியுங்கள்”,என்று கூறினார்.
ஆனால்,தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சிதான் இருந்தது என்பதை மறந்து ஓபிஎஸ் திடீரென இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. அவர் தெரிந்து பேசினாரா இல்லையென்றால் கட்சிக்குள் தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்ற அதிருப்தியில் பேசினாரா என்று தெரியவில்லை. ஆனால் எடப்பாடியார் கையில் தலைமை சென்றதில் இருந்தே கடும் அப்செட்டில் தான் ஓபிஎஸ் இருந்து வந்துள்ளார்.அதனை பல நேரத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கூட கூட்டத்தில் வைத்தே ஓபிஎஸ்க்கு தகுந்த மரியாதையை வழங்காமல் கூட்டத்தின் பாதியிலேயே எப்படியாவது போங்க என்று சாபம் விட்டு சென்றுவிட்டார். பிறகு பெயருக்கு ஒரு எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியை அளித்து அழகுபடுத்தி உள்ளது. ஏற்கனவே சேலத்தில் எடப்படியாரின் நெருங்கிய நண்பரின் இல்லத்தில் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருவதால், அப்செட்டில் உள்ளார். மேலும் நெல்லையில் ஓபிஎஸ் பேசிய பேச்சை கேட்டு மேற்கொண்டு டென்சன் தலைக்கேறி என்ன செய்வதென்று தவித்துக்கொண்டிருக்கிறார்.