• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

5800 பேர் சாப்பிடும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய உணவகம்..!

Byவிஷா

Jul 3, 2023

ஒரே நேரத்தில் 5800 பேர் சாப்பிடும் வகையில், உலகின் மிகப்பெரிய உணவகம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது.
சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் அமைந்திருக்கும் மலையில் உலகிலேயே மிகப்பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 5800 வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 3300 சதுர அடியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில் 900 டேபிள் போடப்பட்டுள்ளது என்றும் உணவகத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை செல்ல வாடிக்கையாளர்களுக்கு சில நிமிடங்கள் வரை ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பிபா யுவான் உணவகத்தில் ஆர்டர் செய்துவிட்டு அந்த உணவைப் பெற 30 நிமிடங்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும். இந்த உணவகத்தில் நூற்றுக்கணக்கான சமையல்காரர்கள் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் இந்த உணவகத்தை வௌ;வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.