• Sun. Nov 3rd, 2024

“மிஸ் அமெரிக்கா”-வின் பயணம் முடிந்தது…

Byகாயத்ரி

Feb 2, 2022

பல நடிகைகள் மட்டும் பிரபலங்கள் திடீரென்று தற்கொலை செய்து அவர்களின் குடும்பங்களையும் ரசிகர்களையும் துயரத்தில் ஆழத்தி விடுகின்றனர்.அந்த வகையில் “மிஸ் அமெரிக்கா” பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற இவருக்கு அப்படி என்ன சோகம் என்று தெரியவில்லை.கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது 30). இவர் மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார். செஸ்லி கிரிஸ்ட், நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வந்தார்.இந்த நிலையில், தான் வசித்து வந்த 60 மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து செஸ்லி கிரிஸ்ட் தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கட்டடத்தின் 29வது மாடியில் நின்று கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதனால், அவர் கட்டடத்தின் 29வது மாடியில் இருந்தே கீழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

செஸ்லி கிரிஸ்ட்தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டு வரும்’ என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற செஸ்லி கிரிஸ்ட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மனிதனாக பிறந்தால் இறப்பு என்ற ஒன்று நிகழ தான் செய்யும், ஆனால் அதனை தேடி நாமே செல்லக்கூடாது.அது நம்மை மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ளவரையும் பாதிக்கும். தற்கொலை என்றுமே தீர்வாகாது என்பதை நம் நினைவில் வைக்க வேண்டும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *