• Mon. Apr 28th, 2025

அம்பேத்காருக்கு மரியாதை செலுத்திய, இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம்…

புரட்சியாளர் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்காரின் 135 வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கார் வெங்கல திருவுருவச் சிலைக்கு இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக, பெரியகுளம் நகராட்சியில் இருந்து பேரணியாக கோஷங்கள் முழக்கம் இட்டு, மலர்மாலையை எடுத்துச் சென்று தேசத்தந்தை பாபா சாகிப், டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில், தோழர் நா. ஜெகநாதன், மாநில இணை செயலாளர் தோழர் நடராஜன், மாவட்டத் தலைவர்
தோழர் பிச்சைமுத்து, வட்ட செயலாளர் தோழர் மணிகண்டன், மாவட்ட அமைப்பாளர் தோழர் முருகேசன், கிளைத் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி கிளைச் செயலாளர் கலையரசன், பாலகிருஷ்ணன், பாரதி, ரத்னா தேவி, பழனியாண்டி, ஆறுமுகம் மற்றும் நமது தொழிலாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டார்கள்.