


சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் மதுரை காளவாசல் பைபாஸ் சாலை ராம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது காளவாசல் பகுதியில் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் இவர் யார் என விசாரித்து வந்தனர். ஆதரவற்றவர் என தெரிய வந்தது. மேலும் பிரேத பரிசோதனை முடிந்து இன்று திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் பொன் முனியாண்டி மற்றும் நேதாஜி டிரஸ்ட் உரிமையாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ஆதரவற்ற மூதாட்டியின் பூத உடலை தத்தனேரி மயானத்தில் அவர்களது சொந்த செலவில் நல்லடக்கம் செய்தனர். காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் இசையல் பொதுமக்களால் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


