


புதுச்சேரி அரசு சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனை ஒட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


தொடர்ந்து இதேபோன்று திமுக சார்பில் மாநில அமைப்பாளர் சிவா, அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன், பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில அமைப்பாளர் கணபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில முதன்மை செயலாளர் தேவ பொழிலன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் மாணவர் அமைப்பினர் என பல தரப்பினரும் அம்பேத்கர் சிலைக்கு மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

