


அரசியலமைப்பு தந்தை டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரிஅரசு கலைமாமணி விருதாளர்கள் சங்கம் சார்பில் 70 தவிலிசை மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு,பாகூர் கிராமத்தில் நடைபெற்றது.

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நாட்டில் சமத்துவம், சமதர்மம், ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும், மது, போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை மையமாக வைத்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில்… தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற 70 தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் 134 இடைவிடாமல் வாசித்து உலக சாதனை நிகழ்வை நிகழ்த்தினார்கள்.

ஈச் உலக சாதனை அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பூபேஷ் குப்தா தலைமையில் 70 இசைக்கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள்.. இதனை பாகூர் மட்டுமின்றி புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இசை ஆர்வலர்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்.

இது குறித்து ஈச் உலக சாதனை அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் தமிழ்வாணன் கூறும்போது…
தவில் மற்றும் நாதஸ்வர கலை மென்மேலும் வளர வேண்டும் பாரம்பரிய கலையை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு இந்தநிகழ்ச்சி நடைபெற்றது, 134 நிமிடங்கள் இடைவிடாமல் வாசிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது இது மேன்மேலும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

