


சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் லட்சுமி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அடுத்த பிச்சை வீரன் பேட் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.


இதில் புதுச்சேரி ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் லட்சுமி நாராயணன் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிர்வாகிகள் விசா ஏழுமலை, பாலாஜி, மற்றும் குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவன தலைவர் லட்சுமி நாராயணன் செய்திருந்தார்.

