• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

உதகையில் நான்காம் ஆண்டு சர்வதேச குறும்பட திருவிழா துவங்கியது

உதகையில் சர்வதேச குறும்பட விழாவை வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.தமிழக வனத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குறும்பட விழாவை துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த குறும்பட விழாவில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 120 க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும் நீலகிரியிலுள்ள படுகர், தோடரின மக்களின் குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. நீலகிரி பிலிம் கிளப் மூலம்‌ இந்த சர்வதேச குறும்பட விழா நடத்துகிறது. உதகையில்‌ உள்ள அசெம்பிளி திரையரங்கில்‌, இன்று முதல்‌ டிசம்பர்‌ 4 ஆம் தேதி வரை மூன்று நாள்‌ திரைப்பட விழாவாக நடைபெறவுள்ளது.
நான்காம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு குறும்பட விழாவில் வெற்றி பெற்ற சிறந்த குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க உள்ளனர்.