• Thu. Apr 18th, 2024

பறந்த பறவைகள் இறந்து கிடந்தன..

Byகாயத்ரி

Feb 7, 2022

ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமான பறவைகள் இறந்துவிழுந்ததால் பெரும் அச்சம் எழுந்துள்ளது.

அசாமின் பர்ஹாம்பூரில் நகாவன் நகரில் சாந்திவன பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்து கிடந்தன. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயிரிழந்து கிடந்த பறவைகள் அருகே, உயிருடன் போராடிக்கொண்டிருந்த மீதமிருந்த பறவைகளை காப்பாற்றுவதற்காக நெருப்பு மூட்டி வெப்பம் பரவ செய்தனர்.பல பறவைகள் இறந்தபோதிலும், நெருப்பு மூட்டி அனல் பரவ செய்து, மற்ற பறவைகளை காப்பாற்றினோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அறிந்து அதிகாரிகள், காவல்துறையினர் நேரில் சென்றனர். அப்போது, கனமழை மற்றும் கடும்பனி ஆகியவற்றை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது நிலவி வரும் கடுமையான குளிரால் பறவைகள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி வனசரக அதிகாரி மலாகர் கூறும்போது, உயிருடன் பிடிப்பட்ட அனைத்து பறவைகளும் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அவற்றை குணப்படுத்த எங்களால் முயன்றவரை சிறப்புடன் செயல்படுவோம். வானிலை மோசமடைந்த சூழலால் மருத்துவர்கள் இங்கு வரவில்லை. 100க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்து உள்ளன என தெரிவித்து உள்ளார்.

அதேநேரத்தில் பறவை காய்ச்சலால் அவை பாதிப்படைந்து உயிரிழந்து இருக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. எனினும் இது குறித்து ஆய்வு செய்துதான் முடிவு செய்யப்படும் என்றும், பறவை காய்ச்சல் தான் காரணம் என்றால் உடனடியாக கிராமப்பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினர். உயிரிழந்த பறவைகளில் அதிகளவில் கொக்குகள் உள்ளதாகவும் மேலும் சில பறவைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *