• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தலத்தெரு தூய அந்தோனியார் ஆலயத் திருவிழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 22, 2026

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் வடக்கு தொகுதிக்கு
உட்பட்ட தலத்தெரு பகுதியில் தூய அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான இவ்வாலயம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தேவாலயத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் தொடங்கின கடந்தாண்டு கோயில் கட்டுமான பணிகள் நிறைவேற்று முதலாம் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடியேற்றத்தை ஒட்டி கோட்டுச்சேரி பங்கு தந்தை ஆரோக்கிய ஜான் ராபர்ட் அவர்களால் மந்திரிக்கப்பட்ட தூய அந்தோனியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி தலத்தெரு பகுதியின் பல்வேறு வீதிகளில் வலம் வந்து தேவ மன்றாட்டுக்களுடனும் வான வேடிக்கைகளுடனும் தூய அந்தோனியார் கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றும் போது இசைக்கப்பட்ட தூய அந்தோனியார் பாடல் அங்கிருந்த கிறிஸ்தவர்களை மனம் உருக செய்தது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான வரும் 23-தேதி அலங்கார தேர்பவனி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 24- தேதி கொடி இறக்கத்துடன் தூய அந்தோனியார் ஆலய திருவிழா நிறைவடைகிறது.

இந்தக் கொடி ஏற்ற நிகழ்ச்சியில் தலத்தெரு கிராம முக்கியஸ்தர்கள் கிராமவாசிகள் உள்ளிட்ட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.