வெம்பக்கோட்டை தாலுக்கா கீழராஜகுலராமன் பகுதியில் வசிக்கும் பொன்ஆனந்த் ,சாந்தி குடும்பத்தார்களை தாக்கிய நபர்கள் மீது, விருதுநகர் மாவட்ட காவல்துறை எந்த வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மதுரை மாவட்டத்தில் உள்ள தென் மண்டல காவல்துறை ஐஜியின் அலுவலகத்தில் தஞ்சமடைந்த பொன்ஆனந்த் குடும்பத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை.
இது பற்றி வெம்பக்கோட்டை சாந்தி கூறும் போது..,
எங்கள் குடும்பத்தினர் வெம்பக்கோட்டை தாலுக்கா கீழராஜகுலராமனின் நாங்கள் தலைமுறை, தலைமுறையாக குடியிருந்து வருகிறோம். நானும் எனது கணவரும் ஊர் பொதுமக்களுக்கு மற்றும் படிப்பு இல்லாதவர்களுக்கு எங்களில் முடிந்த உதவிகளையும் ஊரில் உள்ள குறைகளையும் அரசு கவனத்துக்கு எடுத்து கூறுவோம். இது பிடிக்காத ஊரில் உள்ள நாட்டாமை பிச்சை பிரவேஷ் ஆகியோர்கள் எங்களை அடியாட்களை வைத்து மிரட்டி வருவதுடன் எங்கள் மகன், மகள் மீதும் மற்றும் உறவினர் அக்கா மீதும் கார் வாகனங்களை அடித்து நொருக்கினார்கள். இதுபற்றி விருதுநகர் காவல் துறையில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நாங்கள் குடும்பத்தோடு தென் மண்டல ஐஜி அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளோம் என்றார்.








