உசிலம்பட்டி குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழாவை முன்னிட்டு, குழந்தை ஏசு தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி திருவிழா இன்று குழந்தை ஏசு ஆலயத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


முன்னதாக குழந்தை ஏசு ஆலய பாதிரியார்களின் கூட்டு திருப்பலி நடைபெற்ற பின் அலங்கரிக்கப்பட்ட குழந்தை ஏசு திரு உருவம் தாங்கிய திருத்தேர் ஆலயத்திலிருந்து புறப்பாடாகி பேரையூர் ரோடு, கவணம்பட்டி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து மீண்டும் குழந்தை ஏசு ஆலயத்தில் நிறைவுற்றது.
இந்த பவனியில் தீபங்கள் ஏந்தியவாறும், குழந்தை ஏசுவின் பாடல்களை பாடியவாறு பங்கு தந்தைகள், அருட் சகோதரிகள் மற்றும் இறை மக்கள் இணைந்து மேற்கொண்டனர்.