• Sat. Apr 26th, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேச்சு…

Byகுமார்

Jan 26, 2025

நாட்டில் அரசின் சூழலில் யார், யாரோ எதை, எதையோ கொண்டாடி வருகின்றனர். IIT நிறுவத்தின் தலைவர் எதை பற்றி பேசுகிறார். எதில் மருத்துவ குணங்கள் உள்ளது. மாட்டின் கோமியத்தில் மருந்துவ குணம் உள்ளது என்பதை பேசியதற்கு கொண்டாடி வரும் நிலையில், நாம் மொழியின்-தமிழ் இனத்தின் அடையாளத்தை இந்த மொழிக்காக உயிரிழந்தவர்களை போற்றும் வகையில், தமிழ் மக்களின் அடையாளத்தை பற்றி நாம் இன்றைக்கு பேசி வருகிறோம்.

இந்தி எதிர்ப்புக்கு மாணவர்கள் போராட்டமாக, இளைஞர்கள் போராட்டமாக, பெண்கள் போராட்டம் இந்த இந்தி மொழி எதிர்ப்பிற்கு போராடினார்கள். இந்த போராட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் எரிமலையாக வெடித்த நிலையில் ஒன்றிய அரசு.

ஒரு மொழி நம்மீது திணிக்கப்படும் போது நமது மொழிக்கு மரியாதை குறைக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ஆதிக்கம் என்பது…. நாடாளுமன்றத்தில் எனக்கு நடந்துள்ளது.

நீ யாராக இருந்தாலும் இந்தி தெரியவில்லை என்றால் என்னுடைய பதில் உனக்கு கிடைக்காது.

இந்தி திணிப்பு என்பது முதலில் நீங்கள் இந்தி படிக்க வேண்டும். பழங்குடிஇன ஒரு மாணவன் அல்லது மாணவி இருந்தால் பள்ளி கூடம் நடத்த வேண்டும் என்பது தான் நமது சமூக நீதி. ஆனால் மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தின் வாயிலாக நம்மளை 50 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டின் எல்ல இடங்களில் கல்லூரிகள் இருக்க வேண்டும் என கூறி கல்லூரிகளை கொண்டு வந்தனர் கலைஞர். நாங்கள் இந்தி படிக்க மாட்டோம், முடியாது நீ ஆனதை செய் என்ற பிரகடனப்படுத்தியவர் ஸ்டாலின்.

சிறுபான்மையினரை பாதுக்காக்க கூடிய அரசு சமூக நீதியான நம் அரசு. ஒன்றிய மோடி அரசு சிறுபான்மை மக்களின் நிலத்தை பிடிங்கி யாருக்கும் கொடுக்கும், அதானி-அம்பானியிடம் கொடுக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தலை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. இதற்காக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பிஜேபி ஆட்சி துடித்துக் கொண்டிருக்கிறது.

தேர்தலுக்காக எந்த உறவும் இல்லை, ஒட்டும் இல்லை என்று சொல்கிறது அதிமுக. அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் திட்டம் கொண்டுவருவதற்கு I SUPPORT என்று பேசிய தம்பிதுரை எந்த கட்சி.?

தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலம் காலமாக அவங்களுக்கு அடிபணிந்து அவங்க சொல்றதை எல்லாம் கேட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டு வந்த CAA சட்டம், மைனிங்காக இருக்கட்டும் அதிமுக உடன் சென்றது.

எல்லாம் உடைத்து தகர்த்தெறிந்த தந்தை பெரியாரை ஆண் பெண் என்ற எந்த வித்தியாசம் இல்லை நீயும் எழுந்து நில் உனக்கும் எதிர்காலம் இருக்கிறது என்று பெண்களைப் பார்த்து அறைகூவல் விட்ட தந்தை பெரியாரை அவமதிக்கிறார்கள்.! அதிமுகவும் EPS எங்கே போனார்கள்.?

நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாதவர்கள் இந்த நாட்டிலே அரசியல் செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க எந்தனை கனவுகள் கண்டாலும்..! எத்தனை சாட்டையால் அடித்துக் கொண்டாலும்…! எத்தனை நாற்காலிக்கு அடியிலே உருண்டு புரண்டாலும்..! எந்த காலத்திலும் இந்த மண்ணின் மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்….! மன்னிக்கவும் மாட்டார்கள்..!

எல்லா துறைகளிலும் முன்னேறி கொண்டிருக்கக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு..!

ஒன்றிய அரசின் மோடி ஆட்சி ஜிடிபி வளர்ந்துகிட்டே இருக்கிறது. ஆனால் அந்த ஜிடிபி ஒன்றிய அரசாங்கத்தை விட தேசிய அளவை விட பிஜேபி ஆட்சியை விட தமிழ்நாட்டிலே தான் அதிகமாக வளர்ந்து இருக்கிறது.

பெண்கள் அதிகமாக வேலைக்கு போவது தொழில் முனைவராக இருப்பது… இந்த தேசிய அளவீட்டை விட தமிழ்நாட்டில் தான் அதிகம்… அதுவும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கல்வியிலே இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்…!

இந்த மாநிலத்திலே இருக்கக்கூடிய அடித்தட்டுல இருக்கக்கூடிய கல்லூரிக்கு போய் படிக்க முடியாத பெண்கள் அவங்களோட கல்வி எந்த காரணத்தை கொண்டும் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த பெண்களுக்காக புதுமைப்பெண் திட்டம்.

எத்தனையோ பெண்கள் மறுபடியும் தன்னுடைய தடைபட்ட கல்லூரி படிப்பை இந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட பிறகு இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.