• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிட்டுக்குருவிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடிய குடும்பம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் ஆசையோடு வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியில் கூடுகட்டி வாழ்ந்து வரும் சிட்டுக்குருவி குடும்பங்களுக்கு இன்று கேக் வெட்டி சிட்டுக்குருவி தினத்தில் குருவி குடும்பத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய குடும்பம் மஞ்சூர் மின்வாரிய அலுவலக பகுதியில் வசித்து வரும் சபரீஷ் இவருடைய மகள் கிரிஷிதா பறவைகள் மீது ஆர்வத்தோடு உள்ள குழந்தை தனது வீட்டின் மீது சிட்டுக்குருவிகள் வருவதை கண்டு தனது தந்தையிடம் குருவிகளுக்கு தங்குவதற்கு வீடு செய்து தரும்படி கேட்டுள்ளார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு அட்டைப்பெட்டியில் கயிறை கட்டி வீட்டின் மேல் பகுதியில் வைத்துள்ளனர் சில நாட்களிலே ஒரு குருவியானது அதில் கூடு கட்ட துவங்கியது.

முட்டையிட்டு குஞ்சுகள் பறித்து தொடர்ந்து நான்கு ஐந்து முறையாக குருவி இனப்பெருக்கம் செய்து வருகிறது தற்போது முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது.நேற்று உலகம் முழுவதும் உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுவதால் கிரிஷிதா தனது தந்தையிடம் குருவிக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டும் கேக் வாங்கி வரும்படி கூறி கேக்குகள் வெட்டி நண்பர்களுக்கு கேக் ஊட்டி சிட்டுக்குருவிகள் தினத்தை கொண்டாடினார்கள் தினம்தோறும் காலை மாலை நேரங்களில் அரிசி சாதம் கம்பு தண்ணீர் வழங்கி வருகிறார்கள்