• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மின்சாரத்தின் பிடியில் சிக்கிய குழந்தையை கண நேரத்தில் மீட்ட முதியவர்கள்..!

Byவிஷா

Sep 28, 2023
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் மழை பெய்து கரடு முரடான சாலையில், தண்ணீர் தேங்கியிருந்திருக்கிறது. அப்போது, அந்த வழியே சென்றுகொண்டிருந்த 4 வயது சிறுமிமீது திடீரென மின்சாரம் தாக்கியிருக்கிறது. தவறி குழந்தை கீழே விழுந்திருக்கலாம் என நினைத்த அந்த வழியே சென்ற முதியவர் ஒருவர், குழந்தையைத் தூக்க முயன்றபோது, அவருக்கும் மின்சாரம் தாக்கியிருக்கிறது. சுதாரித்துக்கொண்ட அவர், உடனே அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் சிறு மரக்குச்சியை எடுத்து அக்குழந்தையை காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.