• Mon. Jan 20th, 2025

ஓய்வு பெறும் நாளில் அரசு பேருந்தை கட்டித்தழுவி அழுத ஓட்டுநர்..!

ByKalamegam Viswanathan

Jun 1, 2023

ஓய்வு பெறும் கடைசி நாளன்று தான் பணியாற்றிய அரசு பேருந்தை கட்டித்தழுவி அழுத ஓட்டுநர் முத்துப்பாண்டி வீடியோ வைரல் ஆகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வைக்கிற பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி வயது 60 இவர் திருப்பரங்குன்றம் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இன்று அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி பணியை நிறைவு செய்தார். மாலை பணியை முடித்த பின்பு பேருந்தின் ஸ்டேரிங்கை முத்தமிட்டு தொட்டு வணங்கி பின் பஸ்ஸில் படிக்கட்டு வழியாக படிக்கட்டு மற்றும் பேருந்தின் முன்புறம் தொட்டு வணங்கி கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அழுதார்.


தனது 30 ஆண்டு கால சேவையில் மிகவும் நேசித்தது டிரைவர் தொழில் தான் என்றும் தனது தாய் தந்தையருக்கு பின் இந்த தொழிலை உயிராக நேசித்தேன் என்றும் இந்த தொழில் முலம் தான் தனக்கும் மனைவி குழந்தைகள் கிடைத்தது என்பதில் பெருமை கொள்கிறேன் என்று பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் வருத்தத்துடன் செல்கிறேன் என முத்துப்பாண்டி கூறினார். தனது பணிக்காலத்தில் பயணிகள், பொதுமக்களிடம் நல்ல முறையில் பழகியவர் என முத்துப் பாண்டியை சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஒட்டுனர் முத்துப்பாண்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருவது பாரவையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.