• Wed. Jan 22nd, 2025

குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!

பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுசெயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டார். பொருளாளர் முத்துராமன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், பாஜக மீனவரணி மாநில செயலாளர் சகாயம், துணை தலைவர்கள் தேவ், சொக்கலிங்கம், பொதுசெயலாளர் ஜெகநாதன், கவுன்சிலர்கள் ஐயப்பன், ரோசிட்டா, மாநகர தலைவர் ராஜன், மாநகர பார்வையளர் அஜித், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.