மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எந்த விஷயங்களையும் செய்யாமல் நடுத்தர மக்கள் ஆவினில் வாங்கக்கூடிய பொருள்களுக்கு விலையை அதிகரித்து, தற்போது மதுபானங்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதில் வரும் 2 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து தான் அரசை நடத்த உள்ளதாக சொல்கின்றனர்.திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறது. திமுக அரசு இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பொருளினுடைய விலையையும் உயர்த்தும். எந்த சிந்தனையும் புதிதாக இல்லாமல் திமுக அரசு அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.