• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்

ByA.Tamilselvan

Jun 1, 2022

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது” என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கோவையில் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்தெந்த வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே, அளித்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அரசு வாக்குறுதிகளை அளிக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது” என்றார்.
ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் (33) என்ற யூடியூபர் மோசடிபுகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார் .இதுகுறித்து வானதிசீனிவாசன் கூறும் போது, “திரும்பத் திரும்ப பாஜக ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது. விசாரணை முடிந்த நிலையிலும் நள்ளிரவில் தீவிரவாதியை போல ஒருவரை கைது செய்வது கருத்து சுதந்திரமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி முயற்சிகள் மூலம் பாஜகவின் ஆதரவாளர்களை முடக்கிவிடலாம் என்று நினைத்தால் அந்தக் கனவு ஒரு போதும் பலிக்கப் போவதில்லை” என்ற வானதி சீனிவாசன், “தேசியக் கொடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த நாட்டில் மாறாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருப்பதை ஒருபோதும் பாஜக மாற்ற நினைக்காது” என்று கூறி