• Fri. Apr 19th, 2024

தஞ்சையில் செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பாடு சாப்பிட்டு.., விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கலெக்டர்..!

Byவிஷா

Apr 3, 2023

செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், தஞ்சையில் மாவட்ட கலெக்டர் செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பாடு சாப்பிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயாரான உணவை சாப்பிட்டு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த ஏராளமான பொதுமக்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை அரவை செய்த அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலந்து தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் ரத்த சோகையை தடுக்கலாம். ரத்த உற்பத்திக்கும், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் செறிவூட்டப்பட்ட அரிசி உதவுகிறது. என்ற துண்டு பிரசங்கங்களுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயரான உணவை சாப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட உணவுகள் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு பரிமாறப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் பொதுமக்களுடன் செறியூட்டப்பட்ட அரிசியில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வாழ் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *