• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பேராவூரணியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

Byமுகமதி

May 16, 2026

மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வு என்பது தகுதித் திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்று கண்ணா? மாணவர்களின் உரிமைக்காக, மாநில உரிமைக்காக, இந்திய அரசியலமைப்பு சட்டத் திரிபு வாதத்தை தடுக்க பேராவூரணி
தந்தை பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்டத் திராவிடர் கழக் காப்பாளர் அத்திவெட்டி
பெ. வீரையன் தலைமையிலும், மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப.சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்து மாணிக்கம், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், அவைத் தலைவர் மாவடு குறிச்சி
ஆர். நீலகண்டன், மத்திய ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வழக்கறிஞர் கருப்பையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வீரமணி, நகரச் செயலாளர் மூர்த்தி, மறுமலர்ச்சி திமுக நகரச் செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்
க. குமார் , திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட பொறுப்பாளர் சித. திருவேங்கடம், நகரப் பொறுப்பாளர் தா. கலைச்செல்வன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை
விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் இள. குமணன், மற்றும் திராவிடர் கழகம் சார்பில் புலவஞ்சி இரா. காமராஜ், பேராவூரணி இரா.நீலகண்டன், முத்து துரைராஜ், சோம. நீலகண்டன், சி. ஜெகநாதன், மு. தமிழ் செல்வன், சந்திரமோகன்,வசி, சசிகுமார், மாணவர்கள் பகுத்தறிவு, அகர முதல்வன், மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான முழக்கம் செய்தனர். திராவிடர் கழக தலைமை நிலைய சொற்பொழிவாளர் மாங்காடு சுப. மணியரசன் கண்டன உரையாற்றினார்.