• Fri. Apr 19th, 2024

கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சி

Byகாயத்ரி

May 27, 2022

சென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில்முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் தினத்தில் வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் நம் அனைவருக்கும் தித்திப்பான நாள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையையும் நம்ம ஆருயிர் தலைவருக்கே உரியது. கலைஞர் சிலையாக மட்டுமல்ல நம் நெஞ்சில் நிலையாக வீற்றிலிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார் என்று சூளுரைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *