• Wed. Feb 12th, 2025

விடியல் அரசு-னா அப்படித்தான்; மின்சாரத்தை திருடினா யார் கேட்பா? இவர்களை எல்லாம் கேட்க முடியுமா என்று புலம்பி தள்ளினர் பொதுமக்கள்

ByP.Thangapandi

Mar 23, 2024

  • அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து லைட், ரேடியோ அமைத்த திமுகவினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று இரவு 8 மணியளவில் தேனி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.,

இந்த பிரச்சாரத்திற்காக உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கொடி தோரணம் கட்டி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ள திமுகவினர்., லைட் மற்றும் ரேடியோ அமைப்பதற்காக அருகே செல்லும் மின் வயர்களில் கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி பயன்படுத்தி வருகின்றனர்.,

இந்த மின் திருட்டு தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுக்கவில்லை, மின் வாரிய அதிகாரிகளின் அனுமதியுடன் நடைபெறுகிறதா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.,