• Thu. Apr 25th, 2024

சாலையை முடக்கிய முதலை.., வைரலாகும் வீடியோ..!

Byவிஷா

Feb 26, 2022

நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய முதலையை பார்த்தாலே அனைவருக்கும் ஒருவித பயஉணர்வு ஏற்படும். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்த ஒரு சம்பவத்தில் முதலை செய்த செயலால் பலரும் அதிர்ந்து போய் சாலைகளில் ஸ்தம்பித்து நின்ற காட்சி ஒன்று நெட்டிசன்களை கவர்ந்து இருக்கிறது. ஹீரோவை போல முதலை வேனின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியேறிய காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஊர்வன விலங்குகளை மிருகக்காட்சிசாலையின் மற்றொரு பகுதிக்கு மாற்றுவதற்காக ஊழியர்கள் வேனில் முதலை மற்றும் பிற உயிரினங்களை கொண்டு சென்றுள்ளனர். அப்போது வேனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முதலை தப்பித்து வெளியேறியது. இந்த காட்சியை அங்கு வழியில் சென்ற ஜெசிகா ஸ்டார் என்பவர் படம்பிடித்து இருக்கிறார். செயின்ட் அகஸ்டின் அலிகேட்டர் பண்ணை விலங்கியல் பூங்காவால் பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த வைரல் வீடியோவில், பெரிய முதலை ஒன்று வேனின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறி சாலையில் வேகமாக செல்கிறது. சாலையில் முதலையினை பார்த்த அனைவரும் பயத்தில் ஆழ்ந்து வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டனர். தப்பித்து வெளியேறிய முதலையை கார்சின் மெக்கிரீடி மற்றும் ஜெனரல் ஆண்டர்சன் என்ற தொழிலாளர்கள் இருவரும் பிடிக்க முயல்கின்றனர். பின்னர் ரியான் மற்றும் டொனால்ட் என்கிற இரு பெண்களின் உதவியுடன் முதலையைப் பிடித்தனர்.
முதலையை பிடித்த பின்னர் ஊழியர்கள் அதனை அதன் புதிய வாழ்விடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும்போது அதனை திறமையாக கையாள ஊழியர்களுக்கு முறையான பயிற்சியினை அளிக்கப்போகிறோம். இவ்வாறு தப்பித்த முதலையை எங்கள் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு முதலையை மீட்டெடுத்து புதிய வாழ்விடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றுவிட்டனர். விலங்கின் வாய் பாதுகாப்பாக இருந்ததால் எந்த நேரத்திலும் உண்மையான ஆபத்து இல்லை” என்று அந்த வீடியோவுடன் கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி 250 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *