வாயில் கறுப்பு துணி கட்டி கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் கவுன்சிலர்கள் இரவிலும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பேரூராட்சியில் இரவிலும் கவுன்சிலர்கள் போராட்டம் தொடர்கின்றனர். பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து மன்ற கூட்டத்தை புறக்கணித்து 10-கவுன்சிலர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.தற்போது பேரூராட்சி அலுவலகத்தை பூட்ட விடாமல் அலுவலகத்திற்குள் புகுந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இரணியல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடரும் போராட்டம்.