• Fri. Apr 18th, 2025

மாணவிகளை கிண்டல் செய்த நபரை தட்டிகேட்டவருக்கு அரிவாள் வெட்டு

மாணவிகளை கிண்டல் செய்தவர்களை தட்டகேட்ட மாணவியின் தாய் மற்றும் இருவருக்கு உருட்டுகட்டை தாக்குதல் நடத்தி அரிவாளால் வெட்டிய நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
கன்னியாகுமரி மாவட்டம் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளை சுரேஷ் (23)நிஷாந்த் (23)சுபீன் (23)முருகன் (24) ஆகியோர் கிண்டல் செய்துள்ளனர்.இவர்களை தட்டிக் கேட்ட மாணவியின் தாய் மற்றும் நபரையும் அவரது மகனையும் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருந்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்

.பள்ளி மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டிகேட்ட நபருக்கு அரிவாள்வெட்டு விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.மேலும் தப்பி ஓடிய நபர்கள் மீது வழக்குகள் இருப்பதாகவும், வனப்பகுதியில் புகுந்து திருடுவதும், வேட்டையாடுவதும்கஞ்சா விற்பனை நபர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள்புகார் தெரிவித்து வருகின்றனர்.