கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் ,புஞ்சை புகலூர் வடக்கு கிராமம் ஒன்றிய சாலையில், புகலூர் நகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் சபீதா எனபவரின் கணவர் நவாஸ்கான் என்பவர் புகழூர் சக்கரை ஆலைக்கு செல்லும் மெயின் சாலையின் ஒரு பகுதியை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்து வீடு கட்டி பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஞ்சாயத்து ஒன்றிய சாலையை ஆக்கிரமித்து புது கழிப்பிடத்திற்கு செல்லும் வழியை அடுத்து கட்டிடத்தை கட்டி வருகிறார்.

இது குறித்து முன்னால் அரசு வழக்கறிஞர் கரிகாலன் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில். பொது மக்களின் எதிர்ப்பு மீறி பஞ்சாயத்து ஒன்றிய சாலையை ஆக்கிரமித்து பொதுகழிப்பிடத்திற்கு செல்லும் வழியை அடைத்து திமுக 15 வது வார்டு கவுன்சிலர் சபீனா கணவர் நமஸ்கான் வீடு கட்டி வரும் சம்பவம் குறித்து புகலூர் வட்டாட்சியர் மற்றும் புகலூர் வட்ட சார் ஆய்வாளரிடம் மனு கொடுத்தோம். அந்த மனுவின் படி புகார் அளித்த இடத்திலேயே நேரில் சென்று ஆய்வு செய்து நவாஸ்கான் வீடு கட்டி வரும் இடம் பஞ்சாயத்து ஒன்றிய சாலை என்று கண்டறிந்துள்ளது.
புகலூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளரும் கடந்த 12ஆம் தேதி இடத்தினை நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் அதில் அதிகாரிகளின் ஆய்வின்படி பஞ்சாயத்து ஒன்றிய சாலை தெரியவந்தது இதன் அடிப்படையில் இடத்தினை நவாஸ் தான் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நவாஸ் கானிடம் தான் இது குறித்து விசாரித்த பொழுது அப்படித்தான் வீடு கட்டுவேன் வீட்டை கூட எங்கள் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தான் திறந்து வைக்க உள்ளார் உங்களால் என்ன செய்ய முடியும் என சவால் விட்டுள்ளார் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற கவுன்சிலர் அதை மறந்து பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது இது குறித்து தற்பொழுது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். வாக்களிக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் யாருக்கு வாக்களிக்கிறோம் யார் உண்மையாக இருப்பார்கள் என புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.