கரூரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்தார் இதன் மூலம் 36 வழிதடங்களில் மினி பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தஞ்சையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மாவட்டம் முழுதும் 36 வழித்தடங்களில் இயங்கும் மினி பேருந்துகளின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஏற்கனவே 36 வழித்தடங்கள் இயக்கப்படும் இந்த பேருந்துகள் கூடுதலாக சில ஊர்களையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்பி ஜோதிமணி எம்எல்ஏக்கள் மாணிக்கம் சிவகாமசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.