திண்டுக்கல்லில் சமையல் தொழிலாளியை 2 பேர் அடித்து பணம், அலைபேசியை பறித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குமரன்(50) .
இவர் மதுபோதையில் காமராஜபுரம் பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த 2 பேர் இவரிடமிருந்து செல்போன், ரூ.200-ஐ பறித்து தாக்கி விட்டு தப்பினர்.
குமரன் இதை தன் மனைவியிடம் தெரிவிக்க இருவரும் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்தபோது அவரை தாக்கி அலைபேசியை பறித்த இருவரும் குமரனிடம் அலைபேசியை கொடுத்தனர். அலைபேசி வந்து விட்டது. இனி புகார் கொடுக்க வேண்டாம் என நினைத்து குமரன் வீட்டிற்கு சென்றபோது தன் வீட்டருகே மயங்கி விழுந்து இறந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், குமரனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் தான் கொலையா?இயற்கை மரணமா? என விவரம் தெரியும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்திற்குரிய அடிப்படையில் இருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.